தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்

தாக்குதலுக்கு இந்தியா தயார் பாக்., அமைச்சர் ஆரூடம்


UPDATED : ஏப் 29, 2025 02:32 PM

ADDED : ஏப் 29, 2025 04:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2025 02:32 PM ADDED : ஏப் 29, 2025 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: ''இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் நேற்று தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாக்., இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில், பாக்., ராணுவ அமைச்சர் க்வாஜா முகமது ஆசிப் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திய ராணுவம் எந்தநேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் எங்கள் படைகளை வலுவூட்டி தயார் நிலையில் வைத்துள்ளோம்.

போர் உருவாகும் சூழல் இருப்பதை அரசிடம் விளக்கி உள்ளோம். 2 - 4 நாட்களில் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.

எங்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம். எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us