ADDED : மே 14, 2025 02:47 AM

புதுடில்லி: இந்தியா - பாக்., இடையே நடந்த சண்டையில், 'ஸ்கால்ப்' ஏவுகணைகள் மற்றும், 'ஹேமர்' வெடிகுண்டுகளை பாக்., மீது, நம் ராணுவம் வீசியது.
சீனாவிடம் இருந்து பாக்., வாங்கிய, எச்.க்யூ. 9பி மற்றும் எச்.க்யூ.16 வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் இந்த தாக்குதல்களை கண்டறிந்து தகர்க்க தவறிவிட்டன.
இவை, குறைந்த உயரத்தில் பறந்து வரும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு அழிக்க தவறிவிட்டன.
இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும், 81 சதவீத ஆயுதங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ராணுவ உபகரணங்களில் பாகிஸ்தான் சீனாவை சார்ந்தே உள்ளது.
மேலும், ஜே 20 போன்ற தங்கள் நவீன போர் விமானங்களை பாக்.,குடன் பகிர்ந்து கொள்ள சீனா தயாராக இல்லை.
இதனால், காலாவதியான தொழில்நுட்பங்களுடன் பாக்., தள்ளாடி வருகிறது.