தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்

பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்

பாகிஸ்தான் தனது செயல்களுக்காக மன்னிப்பு கேட்கணும்; பிரசாந்த் கிஷோர் காட்டம்


ADDED : மே 09, 2025 07:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2025 07:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'பாகிஸ்தான் தனது செயல்களுக்குப் பொறுப்பேற்று, தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிந்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே நிலவும் பதற்றம் தொடர்பாக, ஜன் சுராஜ் கட்சித்தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இந்தியாவைத் தாக்கியதற்கான விளைவுகளை பாகிஸ்தான் முதலில் எதிர்கொள்ள வேண்டும். எங்கள் பதில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. தூண்டுதல் பெயரில் நடக்கவில்லை. பாகிஸ்தான் தனது செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். இதெல்லாம் பஹல்காமில் இருந்து தொடங்கியது. அதன் பிறகு இந்தியா 9 பயங்கரவாதிகளின் தளங்களை குறி வைத்தது.போர் போன்ற சூழ்நிலை சமூகத்திற்கும், இரு நாடுகளுக்கும், அவர்களின் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், அத்தகைய சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

போர் போன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிற்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தவறு செய்திருப்பதை அறிந்திருந்தது. அவர்கள் பிரச்னையை முடித்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us