காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்
காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்: பதிலடி கொடுத்தது இந்திய ராணுவம்
ADDED : ஆக 05, 2025 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டை மீறி பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்திய படைகள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இது குறித்து ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
பாகிஸ்தான் ராணுவம் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கோடு எல்லையை மீறி, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. முக்கியமாக ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடந்தது.
இதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி அளித்தது. 15 நிமிடங்களுக்கு இரு தரப்பிலும் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்துாருக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.