ADDED : மே 14, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், ராணுவ பகுதிகளை உளவு பார்த்ததாக பெண் உட்பட இருவரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர்களுக்கும் பாகிஸ்தான் துாதரக அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நம் வெளியுறவு அமைச்சகம் அந்த துாதரக அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி நேற்று உத்தரவிட்டது.

