தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கைது

டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி கைது


UPDATED : நவ 28, 2026 06:46 PM

ADDED : நவ 28, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 06:46 PM ADDED : நவ 28, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியை, டில்லி சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள்சேர்ப்பு நடப்பதாக மத்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளைப் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதில், ‘வாட்ஸாப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ‘உமர்’ என்ற பெயரில் கணக்கு வைத்திருந்த நபர், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தீவிரவாத கருத்துகளுக்கு உட்படுத்தி, அவர்களை பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடும்படி துாண்டியதை, டில்லி சிறப்புப் பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

சமூக ஊடக பயன்பாட்டின் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டறிந்த போலீசார், டில்லியில் இருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன்பின் அவரிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பினருடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இவரது மொபைல் போனில், ‘பாஸ், ஜாட் சாஹப், பிக் பாஸ், டாக்டர்’ உள்ளிட்ட ரகசியப் பெயர்களில் ஐந்து பாகிஸ்தான் தொலைபேசி எண்கள் சேமிக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத்தின் வதோதராவில் ஏ.கே - 47 துப்பாக்கியுடன் கடந்த 26ம் தேதி கைதான ஜெய்ஷ் – -இ- – முகமது பயங்கரவாதிக்கும், இவருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த ஆண்டு டில்லி செங்கோட்டை அருகே நடத்த குண்டுவெடிப்புச் சம்பவத்தை போன்ற தாக்குதலை மீண்டும் நடத்த இந்த பயங்கரவாத குழு திட்டமிட்டிருக்கலாம் எனவும் டில்லி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us