பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது; சதித்திட்டம் முறியடிப்பு
ADDED : அக் 09, 2025 01:10 PM

சண்டிகர்: தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடைய இருவரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பு, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் வழிகாட்டுதலின் பேரில், பிரிட்டனை மையமாகக் கொண்ட நிஷான் ஜரியன் மற்றும அதேஷ் ஜமாரை ஆகியோரால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாப்பில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த குர்ஜிந்தர் சிங் மற்றும் திவான் சிங் ஆகியோரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ எடையுள்ள வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பஞ்சாப்பில் நிகழ்த்தவிருந்த பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.