தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 'உச்' கொட்ட வைக்கும் 'பன்னீர் 65'

'உச்' கொட்ட வைக்கும் 'பன்னீர் 65'

'உச்' கொட்ட வைக்கும் 'பன்னீர் 65'


ADDED : டிச 13, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கன் 65, காலிபிளவர் 65, மஸ்ரூம் 65 என்று நமது வீட்டிலேயே செய்து சாப்பிட்டு இருப்போம். பன்னீரை வைத்து பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் பிரைட் ரைஸ் ஆகியவை சமைத்து சாப்பிட்டு இருப்பர். ஆனால் 'பன்னீர் 65' யாரும் அதிகம் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள்.

பன்னீரில் நிறைய புரோட்டீன் சத்து இருப்பதால், அசைவ உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத நேரத்தில், அசைவ உணவு பிரியர்கள் பன்னீரை எடுத்துக் கொள்கின்றனர்.

மாலை நேரத்தில் காபி அல்லது டீ குடிக்கும்போது பன்னீர் 65 செய்து சாப்பிட்டு பாருங்கள். உச்சு கொட்டும் அளவுக்கு சுவையாக இருக்கும். பிரியாணி, நெய் சோறு, தேங்காய் சோறுக்கும் பன்னீர் 65 சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.

செய்முறை


பன்னீரை சதுர வடிவில் நறுக்கி, வெந்நீரில் போட்டு சிறிது நேரம் வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மிளகாய் பவுடர், மல்லி பவுடர், சீரக பவுடர், சாட் மசாலா, மஞ்சள் பவுடர், உப்பு, சோள மாவு, அரிசி மாவு, தயிர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

வெந்நீரில் போடப்பட்டிருந்த பன்னீரை எடுத்து இதனுடன் சேர்த்து கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்தால் சுவையான பன்னீர் 65 தயார். அவ்வளவு தான்

-- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us