பெற்றோர் இடப்பெயர்வு விசா: இந்தியர்களுக்கு கனடா அரசு புதிய கட்டுப்பாடு
பெற்றோர் இடப்பெயர்வு விசா: இந்தியர்களுக்கு கனடா அரசு புதிய கட்டுப்பாடு
ADDED : ஜன 05, 2025 10:01 PM

ஒட்டாவா: கனடாவில் வசிக்கும் இந்தியர்களின் பெற்றோர், தாத்தா, பாட்டிகளுக்கு நிரந்தர குடியுரிமை கோரும் புதிய விண்ணப்பங்களை ஏற்க மாட்டோம் என்று கனடா அறிவித்துள்ளது.
கனடாவில் ஏற்கனவே பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்கு விசா வழங்கும் திட்டம் (பி.ஜி.பி) நடைமுறையில் உள்ளது. அதன்படி கனடா குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இந்தியர்கள் ஆகியோர், தங்கள் பெற்றோர், தாத்தா பாட்டிகளுக்கு விசா பெற்று கனடாவில் குடியேறச் செய்ய முடியும்.
இதை கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் பலர் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டு உள்ள நிலையில், இந்த திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அதன்படி, கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் பெற்றோரையோ, தாத்தா பாட்டிகளையோ, கனடாவுக்கு விசா பெற்று அழைத்து வர முடியாது.
இத்தகைய புதிய விசா விண்ணப்பங்களை ஏற்க மாட்டோம் என்று குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைக்கான கனடா நாட்டு அலுவலகம் (ஐ.ஆர்.சி.சி) தெரிவித்துள்ளது.