தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இப்படியும் இருக்கின்றனர் பெற்றோர்!

இப்படியும் இருக்கின்றனர் பெற்றோர்!

இப்படியும் இருக்கின்றனர் பெற்றோர்!


ADDED : ஜன 07, 2026 08:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 08:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பதேஹாபாத்: ஹரியானா மாநிலத்தில் தம்பதிக்கு 10 பெண் குழந்தைகளுக்குப் பிறகு 11வது பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹரியானா மாநிலம் பதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியரான சஞ்சய் குமார் 38, சுனிதா 37, ஆகியோருக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 10 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இந்த தம்பதியருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

11-வது பிரசவம் என்பதால் தாய்க்கு ரத்த சோகை ஏற்பட்டு அதிக ஆபத்து இருந்தது. இருப்பினும், தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகளின் பாட்டி கூறுகையில்,

பல ஆண்டுகளாக நான் செய்த பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றிவிட்டார். தனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு காரணம் தன் மகன் என்றாலும், பெண்கள், ஆண்களுக்கு சமமானவர்கள் என்றார்.

11வது ஆண் குழந்தை பிறந்தது குறித்து சஞ்சய் குமார் தெரிவிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இது ஒருபுறம் மகிழ்ச்சியான நிகழ்வாகப் பார்த்தாலும், மறுபுறம் ஆண் குழந்தைக்காக, தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் சமூக மனநிலை குறித்து விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பெயரிடுதல்: 10 சகோதரிகளும் சேர்ந்து தங்கள் தம்பிக்கு 'தில்குஷ்' (மகிழ்ச்சியான இதயம்) என்று பெயரிட்டுள்ளனர்.

சமூக வலைதள விவாதம்: தந்தை தனது 10 மகள்களின் பெயர்களைச் சொல்லத் திணறும் வீடியோ இணையத்தில் வைரலானது. இது ஒருபுறம் மகிழ்ச்சியாகப் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் ஆண் குழந்தைக்காகத் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் சமூக மனநிலை குறித்த விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us