‛வலிமையுடன் திரும்பி வாருங்கள் ‛ : வினேஷ் போகத்திற்கு பிரதமர் ஆறுதல்
‛வலிமையுடன் திரும்பி வாருங்கள் ‛ : வினேஷ் போகத்திற்கு பிரதமர் ஆறுதல்
ADDED : ஆக 07, 2024 01:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வலிமையுடன் திரும்பி வர வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: வினேஷ் போகத் நீங்கள் சாம்பியனுக்கு எல்லாம் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகமாக திகழ்கிறீர்கள். இன்றைய பின்னடைவு மனவேதனை அளிக்கிறது. இந்த விரக்தியின் உணர்வை வெளிப்படுத்த விரும்பவில்லை. அதேநேரம் நீங்கள் மீண்டும் எழுந்து வருவீர்கள் என்று எனக்கு தெரியம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்களின் இயல்பு. வலிமையுடன் மீண்டு வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்து இருக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.