பார்லி கூட்டத்தொடர் இன்று துவக்கம்; சுமுகமாக நடத்த மத்திய அரசு ஆலோசனை!
பார்லி கூட்டத்தொடர் இன்று துவக்கம்; சுமுகமாக நடத்த மத்திய அரசு ஆலோசனை!
UPDATED : நவ 25, 2024 07:08 AM
ADDED : நவ 24, 2024 11:30 AM

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில், நேற்று (நவ.,24) காலை 11:00 மணிக்கு அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இன்று (நவ.,25) துவங்கி, டிச., 20ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, குறிப்பாக, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்ற அரசு முனைப்புடன் இருக்கிறது.
இந்த சூழலில், நேற்று (நவ.,24) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதான கமிட்டி அறையில் அனைத்து கட்சிக் கூட்டம் கூடியது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து எதிர்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.