குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு
குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு
UPDATED : டிச 20, 2024 12:59 PM
ADDED : டிச 20, 2024 12:34 PM

புதுடில்லி: குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பார்லி., இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கிய முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வந்தன.
இந்நிலையில், கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பா.ஜ., எம்.பி.,க்களை தள்ளிவிட்ட ராகுலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்களும், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இருஅவைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை காலவரையின்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், காலவரையின்றி அவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார்.
முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்களும், இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பார்லி., வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.