பார்லிமென்ட் கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளி; இண்டியா கூட்டணியினர் போராட்டம்!
பார்லிமென்ட் கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளி; இண்டியா கூட்டணியினர் போராட்டம்!
ADDED : டிச 09, 2024 11:33 AM

புதுடில்லி: அதானி விவகாரத்தை முன்வைத்து, பார்லிமென்ட் வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,09) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்கும் படி, பலமுறை எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் துளி அளவும் கூட கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேநேரத்தில், ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் அமைதி காக்கும் படி வலியுறுத்தினார். இதையடுத்து அமைதியான முறையில், இன்றைய அலுவல் நேரங்கள் நடந்து வருகிறது.
போராட்டம்
அதானி விவகாரத்தை முன்வைத்து, பார்லிமென்ட் வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்., அதானி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர்.