ஜன., 31ல் துவங்குகிறது பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜன., 31ல் துவங்குகிறது பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர்
ADDED : ஜன 18, 2025 12:43 AM
புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன., 31ல் துவங்கி ஏப்., 4 வரை நடக்கவுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் ஜன., 31ல் துவங்குகிறது.
அதற்கு அடுத்த நாளான, பிப்., 1ல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இரண்டு பகுதிகளாக நடக்கவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி, ஜன., 31ல் துவங்கி பிப்., 13 வரை ஒன்பது அமர்வுகளாக நடக்கஉள்ளது.
அப்போது, ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமனும் பதிலளிப்பர்.
பின் சிறிய இடைவெளிக்கு பின், மார்ச் 10ல் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் துவங்க உள்ளது.
அப்போது, பல்வேறு அமைச்சகங்களின் மானியங்களுக்கான கோரிக்கை மற்றும் பட்ஜெட் செயல்முறை மீதான விவாதங்கள் நடக்கும். ஏப்., 4ல் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெறும்.
இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 27 அமர்வுகள் நடக்கவுள்ளன. வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிப்பு, புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பார்லிமென்ட் மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கிய நிலையில், பட்ஜெட் தொடராவது சுமுகமாக நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.