தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பரோலில் வந்து தலைமறைவானவர் 24 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்டார்

 பரோலில் வந்து தலைமறைவானவர் 24 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்டார்

 பரோலில் வந்து தலைமறைவானவர் 24 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்டார்


ADDED : மே 21, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி, 24 ஆண்டுகளுக்குப் பின், உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கைது செய்யப்பட்டார்.

வடக்கு டில்லி, ஜஹாங்கிர்புரியை சேர்ந்தவர் ராகேஷ் படேல் என்ற பாப்பி. கடந்த, 1990ம் ஆண்டு பக்கத்து வீட்டுக்காரரை தன் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தார்.

ராகேஷ் படேல், அவரது நண்பர்கள் சந்தர் பிரகாஷ் மற்றும் அனில் குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராகேஷ் படேலுக்கு, 1999ல் திருமணத்துக்காக பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்தவுடன் சிறையில் சரண் அடைந்தார். அதைத் தொடர்ந்து, 2022ல் மீண்டும் பரோலில் சென்ற ராகேஷ் படேல் தலைமறை வானார்.

தனிப்படை போலீசார் ராகேஷ் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், நந்தலால் வர்மா என்ற பெயரில் வாகன உதிரிபாக கடை நடத்தி வந்த ராகேஷ் படேலை, டில்லி போலீசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் ஆஜர்படுத்தப்பட்ட ராகேஷ் படேல், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us