போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிலப் பிரச்னையில் தாயை எரித்துக் கொன்ற ‛பாசக்கார' மகன் கைது
போலீஸ் ஸ்டேஷன் முன்பு நிலப் பிரச்னையில் தாயை எரித்துக் கொன்ற ‛பாசக்கார' மகன் கைது
ADDED : ஜூலை 17, 2024 11:46 AM

அலிகார்க்: உ.பி.,யில்நிலப் பிரச்னை காரணமாக, போலீஸ் ஸ்டேஷன் முன்பு தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் அலிகார்க் மாவட்டத்தில் தர்கன் நகரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா(45). இவரது மகன் சுமன்(22). நிலம் ஒன்று தொடர்பாக குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு அவர்களை போலீசார் அழைத்தனர்.
போலீஸ் ஸ்டேஷன் வந்த ஹேமலதாவை, மகன் சுமன் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததுடன், அதனை மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதனைப் பார்த்த போலீசார் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்தனர். 40 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட ஹேமலதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஹேமலதாவே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டை போலீசார் நிராகரித்துவிட்டனர்.