திமுகவின் ஊழல், தமிழர் விரோத செயல்பாடுகளால் மக்கள் சலிப்பு: பியூஷ் கோயல்
திமுகவின் ஊழல், தமிழர் விரோத செயல்பாடுகளால் மக்கள் சலிப்பு: பியூஷ் கோயல்
ADDED : ஜன 31, 2026 09:29 PM

புதுடில்லி: தமிழக மக்கள், திமுகவின் ஊழல், தமிழ் விரோத கலாசாரத்தால் சலிப்படைந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜ தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் டில்லியில் அளித்த பேட்டி: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ கூட்டணிக்கு வெற்றி எளிது.
தமிழகத்தில் திமுக அரசு,திறமையற்ற மற்றும் மிக மோசமான ஊழல் ஆட்சியை நடத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் முற்றிலும் தமிழ் கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு, இந்தியாவிற்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கின்றனர். திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.
இதனால் அதிமுக- பாஜக கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும்.
துணை முதல்வர் உதயநிதி ஒரு வெறுப்புப் பேச்சாளர். அவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
நடிகர் விஜய் வெறும் ரசிகர் மன்றங்களை வைத்துக் கொண்டு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது; நடிகர் விஜய் ஒரு ஓட்டு பிரிப்பாளர்.இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த கருத்து, தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களிடையே விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

