ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை: கிஷன் ரெட்டி பேட்டி
ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை: கிஷன் ரெட்டி பேட்டி
ADDED : ஜன 04, 2024 04:42 PM

புதுடில்லி: ராகுல் பிரதமர் ஆவதை மக்கள் விரும்பவில்லை என தெலுங்கானா பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்., தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஓய்.எஸ்.ஷர்மிளா காங்., கட்சியில் இணைந்தார். பின்னர் அவர், '' ராகுல் பிரதமராக வேண்டும் என நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இது குறித்து தெலுங்கானா பா.ஜ., தலைவர் கிஷன் ரெட்டி ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. ஷர்மிளாவால் ராகுலை பிரதமராக்க முடியாது.
யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ராகுலின் பார்முலா தோல்வி. அவரின் சித்தாந்தம் தோல்வி அடைந்துள்ளது. ராகுலை பிரதமர் ஆக்க ஷர்மிளா விரும்பலாம். மக்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.