sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மம்தா பானர்ஜி அரசின் காட்டாட்சியை தண்டிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: பிரதமர் மோடி

/

மம்தா பானர்ஜி அரசின் காட்டாட்சியை தண்டிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: பிரதமர் மோடி

மம்தா பானர்ஜி அரசின் காட்டாட்சியை தண்டிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: பிரதமர் மோடி

மம்தா பானர்ஜி அரசின் காட்டாட்சியை தண்டிக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்: பிரதமர் மோடி

6


ADDED : ஜன 19, 2026 04:57 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:57 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கூர்: “மேற்கு வங்க நலனுக்கு எதிராக செயல்படும் திரிணமுல் காங்கிரஸ் அரசு தண்டிக்கப்பட வேண்டும். வரும் தேர்தலில், அக்கட்சியின் 15 ஆண்டுகால மகா காட்டாட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ கம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை யொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்தச் சூழலில் மேற்கு வங்க மாநிலம் மால்டாவுக்கு இரு தினங்களுக்கு முன் சென்ற பிரதமர் மோடி, அங்கு 3,250 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

அத்துடன் மேற்கு வங்கத்தின் ஹவுராவில் இருந்து அசாமின் குவஹாத்தி வரையிலான முதல், 'ஸ்லீப்பர் வந்தே பாரத்' ரயில் சேவையையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக மேற்கு வங்கத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, 830 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.

அத்துடன் நாட்டின் பிற பகுதிகளுடன் கொல்கட்டாவை இணைக்கும் அம்ரித் பாரத் ரயில் சேவையையும் துவக்கி வைத்தார்.

மக்களின் விருப்பம் பின்னர் ஹூக்ளி மாவட்டத்தின் சிங்கூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:



உண்மையான மாற்றத்தை விரும்பியே மக்கள் இங்கு திரண்டு வந்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் நடக்கும் மகா காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே, மக்களின் விருப்பம் என தெளிவாக புரிகிறது.

இங்கு ஊடுருவல்காரர்கள், மாபியா கும்பலை சேர்ந்தோர் சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுஉள்ளது. இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. ஆட்சியில் திரிணமுல் இருக்கும் வரை வேலைவாய்ப்பு என்பது அர்த்தமற்றதாகவே இருக்கும்.

இப்படி மேற்கு வங்க மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் திரிணமுல் காங்கிரஸ் அரசை, வரும் தேர்தலின்போது மக் கள் தண்டிக்க வேண்டும்.

மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்த மாநில அரசுகளுக்கு எல்லாம், தேர்தலின்போது மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர். அதுபோல, மேற்கு வங்க மக்களும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு வரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல் தேர்வு முன்னதாக, வடகிழக்கு மாநிலமான அசாம் சென்ற பிரதமர் மோடி, அம்மாநிலத்தின் காளியாபோரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

அசாமில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது பல ஆண்டுகளாக ஊடுருவல் கள் நீடித்தன. வனப்பகுதி கள், விலங்குகளின் வாழ்விடங்கள் என, பல இடங்களை சட்டவிரோத குடியேறிகள் ஆக்கிரமித்தனர்.

ஆனால், பா.ஜ., ஆட்சி அமைந்த பின் அவை அனைத்தும் மாறியது. அசாமின் உண்மையான அடையாளம், கலாசாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. சொந்த மக்களின் மண்ணை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் முற்றிலும் இழந்துவிட்டது. அந்த கட்சி எதிர்மறையான அரசியல் சங்கதிகளை தான் மக்களுக்கு தருகிறது. அதனால், தற்போது நாட்டு மக்களின் முதல் தேர்வு பா.ஜ.,வாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசி னார்.

ரூ.6,957 கோடியில்

காசிரங்கா சாலை திட்டம்

அசாம் சுற்றுப்பயணத்தின் போது, 6,957 கோடி ரூபாய் மதிப்பிலான 34.45 கி.மீ., துார காசிரங்கா உயர்மட்ட சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அத்துடன் அம்மாநிலத்தின் நகாவ்ன் மாவட்டத்தில் இரு அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதில், ஒரு ரயில் அசாமின் திப்ருகரில் இருந்து உத்தர பிரதேசத்தின் கோம்தி நகர் வரை இயக்கப்படுகிறது. மற்றொரு ரயில் அசாமின் குவாஹத்தியில் இருந்து ஹரியானாவின் ரோஹ்தக் வரை செல்கிறது. இதன் மூலம், அசாமில் இருந்து மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், டில்லி மற்றும் ஹரியானா என பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் இணைப்பு ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us