எல்லாம் மக்களுக்கு தெரியும்: மவுனம் கலைத்தார் சரத்பவார்
எல்லாம் மக்களுக்கு தெரியும்: மவுனம் கலைத்தார் சரத்பவார்
ADDED : நவ 24, 2024 10:27 PM

மும்பை: '' சட்டசபை தேர்தலில் அஜித் பவார் கூடுதல் தொகுதிகளை பெற்றிருக்கலாம். ஆனால், தேசியவாத காங்கிரசை தோற்றுவித்தது யார் என மக்களுக்கு தெரியும்,'' என முன்னாள் அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட சரத்பவார் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அவரது கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் வென்றது. தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்து ஏதும் சொல்லாமல் இருந்த சரத்பவார் தற்போது மவுனம் கலைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பாராதது. ஆனால் அதனை மக்கள் கொடுத்து உள்ளனர். எங்களை விட அஜித் பவார் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், தேசியவாத காங்கிரசை தோற்றுவித்தது யார் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

