sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிதி நிறுவனங்களால் கொடுமை கிராமத்தை காலி செய்யும் மக்கள்

/

நிதி நிறுவனங்களால் கொடுமை கிராமத்தை காலி செய்யும் மக்கள்

நிதி நிறுவனங்களால் கொடுமை கிராமத்தை காலி செய்யும் மக்கள்

நிதி நிறுவனங்களால் கொடுமை கிராமத்தை காலி செய்யும் மக்கள்


ADDED : ஜன 17, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 17, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: கடன் கொடுத்த சிறு நிதி நிறுவனங்களின் தொல்லை தாங்க முடியாமல், நஞ்சன்கூடில் உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள், ஊரை விட்டு ஓடுகின்றனர்.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடின் ஹுல்லஹள்ளி, ராம்புரா, குரிஹுண்டி, சிராமள்ளி, கக்கலுார், ஹெக்கதஹள்ளி, முத்தஹள்ளி கிராமங்களை சேர்ந்த சிலர், சிறு நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி உள்ளனர்.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்த நிறுவன ஊழியர்கள், வீட்டிற்கு வர துவங்கி உள்ளனர்.

அத்துடன், கடன் வாங்கியவர் வீட்டின் முன், 'கடன் வழங்கவில்லை என்று' அறிவிப்பு பலகை வைத்து, கிராமத்தில் அவர்களின் கவுரவத்தை குறைக்கின்றனர். இதற்கு பயந்த பலர், கிராமத்தை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.

சிராமள்ளி கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் உச்சய்யா கூறியதாவது:

சமீப நாட்களாக இப்பகுதியில் சிறு நிதி நிறுவனங்கள் கடன் கொடுப்பது அதிகரித்தது. கடன் கட்ட முடியாமல், எங்கள் கிராமத்தை சேர்ந்த 15 குடும்பங்கள், ஊரை காலி செய்து விட்டு சென்றுவிட்டன.

கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள், கடன் வாங்குவோரால், கடனை திருப்பி செலுத்த முடியுமா, முடியாதா என்பதை பார்ப்பதில்லை. இதனால் கடன் வாங்கியவர்கள், திருப்பி செலுத்த முடியாமல் ஊரை காலி செய்கின்றனர்.

கடன் வாங்கியவர்களை, நிதி நிறுவன ஊழியர்கள் மனதளவில் கொடுமைப்படுத்துகின்றனர். இதற்கு பயந்து செல்வோரை கண்டுபிடித்து, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, அங்கும் மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துகின்றனர். எனவே, சிறு நிதி நிறுவனங்கள் முறையை அரசு ஒழுங்குமுறைபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்று நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கிய ராம்பூர் கிராமத்தின் ருக்மினி, ஹெக்கதஹள்ளி கிராமத்தின் மங்களம்மா ஆகியோர் கூறுகையில், 'சிறு நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர். எங்கள் வீட்டுக்கு தினமும் காலை, இரவு வருகின்றனர்.

'பணத்தை கொடுக்கும் வரை, அவர்கள் எங்கும் செல்வதில்லை. எங்களால் பணம் கொடுக்க முடியவில்லை. தாயாரும், சகோதரரும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் எங்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கின்றனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us