ஊழல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற மக்கள் விருப்பம் ; பிரசாந்த் கிஷோர்
ஊழல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற மக்கள் விருப்பம் ; பிரசாந்த் கிஷோர்
ADDED : ஜூன் 04, 2025 09:01 PM

சாரன்: ஊழல்மிக்க மற்றும் திறமையில்லாத தலைமையிடம் இருந்து மக்கள் விடுதலை பெற விரும்புவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பல மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் சாரன் மாவட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; இது என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி கிடையாது. பீகாரில் மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இங்கு கூடியிருக்கும் மக்கள் என்னுடைய சொந்தமோ, என்னுடைய ஜாதியை சேர்ந்தவர்களோ அல்ல. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு திரண்டுள்ளனர்.
அரசின் மீது ஏற்பட்டுள்ள விரக்தியால் தான் அவர்கள் இங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். பீகாரில் நிலவி வரும் ஊழலால், மக்கள் சலிப்படைந்து விட்டனர். தங்களின் குழந்தைக்கு தரமான கல்வி, போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரும் விரும்புகின்றனர்.
அனைத்துக்கும் மேலாக, ஊழல்மிக்க, திறமையில்லாத தலைமையிடம் இருந்து அவர்கள் விடுதலையை எதிர்பார்க்கின்றனர், எனக் கூறினார்.