ADDED : நவ 15, 2024 03:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் குறித்து, அந்த மருந்துச் சீட்டிலேயே எழுதும்படி உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதை டில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
மனுவை நிராகரித்து அமர்வு கூறியுள்ளதாவது: இது சாத்தியமில்லாததது. அப்படி செய்தால், டாக்டர்களுக்கு அதிக வேலை பளு ஏற்படும்; குறைந்த நோயாளிகளையே பார்க்க முடியும்.
மேலும், நுகர்வோர் நீதிமன்றத்தில் தேவையில்லாமல் அதிக வழக்குகள் தாக்கல் செய்யும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.