மஹாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
மஹாராஷ்டிரா சபாநாயகர் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு
UPDATED : ஜன 16, 2024 07:41 AM
ADDED : ஜன 16, 2024 12:46 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு தொடர்ந்தது
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் முதல்வராக உத்தவ் தாக்கரே இருந்த போது, 2022ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே, கட்சியை உடைத்து தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை திரட்டி பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.
ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருடன் சென்ற ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி, சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம், உத்தவ் தாக்கரே தரப்பு மனு அளித்தது. .
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜன.10-ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.
இதையடுத்து சபாநாயகர் ராகுல் நர்வேகர் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டேயை சட்டசபை கட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நீக்கத்தை ஏற்கவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா என சபாநாயகர் அறிவித்தார். சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.