ADDED : நவ 09, 2024 11:16 PM

பெலகாவி: கலகாம்பா கிராம பஞ்சாயத்து அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், நாற்காலி, மேஜை நாசமானது.
பெலகாவி மாவட்டம், சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கலகாம்பா கிராமத்தில் மேம்பாட்டுப் பணிகளை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா ஜார்கிஹோளி துவக்கி வைத்தார்.
அப்போது, வால்மீகிகள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 'எங்கள் கிராமத்தில் வளர்ச்சிப் பணியை துவக்கிவைக்க வந்திருக்க வேண்டும்' என்றனர். அப்போது இரு கிராமத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள், கலகாம்பா கிராம பஞ்சாயது அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் திருடிச் சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், ஜன்னல் கம்பிகள் கருகியதை கண்டு மரிஹாலா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.