பவர்கிரிட் நிறுவனத்தில் 117 காலியிடம்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
பவர்கிரிட் நிறுவனத்தில் 117 காலியிடம்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
ADDED : அக் 17, 2024 09:19 AM

புதுடில்லி: பவர்கிரிட் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனத்தில் 117 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 6.
மத்திய மின்சாரத்துறையின் கட்டுப்பாட்டில், பவர்கிரிட் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் மாநிலங்களுக்கு மின்சாரங்களை பகிர்ந்து வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தில், டிரெய்னி இன்ஜினியர் மற்றும் டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டிரெய்னி இன்ஜினியர்- 47
டிரெய்னி சூப்பர்வைசர்- 70
கல்வித் தகுதி என்ன?
டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு, 60% மதிப்பெண்களுடன் பி.டெக், பி.எஸ்சி., அல்லது எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு 70 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500. டிரெய்னி சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.300. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் PWD பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.powergrid.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.