தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ முடக்குவாதத்தால் பாதிப்பு; நீர்யானைக்கு 'பிசியோதெரபி'

 முடக்குவாதத்தால் பாதிப்பு; நீர்யானைக்கு 'பிசியோதெரபி'

 முடக்குவாதத்தால் பாதிப்பு; நீர்யானைக்கு 'பிசியோதெரபி'


ADDED : ஜன 12, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் நரம்பு கோளாறால் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் ஏற்பட்டு நடக்க முடியாமல், 15 நாட்களுக்கும் மேலாக தண்ணீரிலேயே மூழ்கியுள்ள நீர்யானைக்கு வனத் துறையினர், 'பிசியோதெரபி' முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் அலிப்பூர் உயிரியல் பூங்காவில், நான்கு வயது நீர்யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024ல், நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த நீர்யானை, அலிப்பூர் பூங்காவில் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. நல்ல உடல்நிலையுடன் இருந்த இந்த நீர்யானை, கடந்த 17 நாட்களாக நீரிலேயே மூழ்கியுள்ளது.

தொடர்ந்து அசைவின்றி தண்ணீரிலேயே இருந்ததால், சந்தேகமடைந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, வனத் துறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் நீர்யானையை பரிசோதித்தனர். இதில், நரம்பு மண்டல கோளாறு காரணமாக கால்களை அசைக்கும் சக்தியை நீர்யானை இழந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை சரிசெய்ய, முதற்கட்ட மருத்துவ சிகிச்சை நீர்யானைக்கு வழங்கப்பட்டது.

இந்த முயற்சி பலனளிக்காத நிலையில், தண்ணீரில் உள்ள யானையை பிரமாண்ட கிரேன் வாயிலாக துாக்க முடிவு செய்யப்பட்டது. அதில் சிக்கல் இருப்பதால், அந்த முடிவு கைவிடப்பட்டது.

இதையடுத்து, நீர்யானைக்கு பிசியோதெரபி மற்றும் 'இன்ப்ரா ரெட்' எனப்படும் அகசிவப்பு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அலிப்பூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த மருத்துவக் குழுவினர், அது தொடர்பான சிகிச்சையை நேற்று முன்தினம் துவக்கியுள்ளனர்.

அலிப்பூர் உயிரியல் பூங்காவில் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு இன்ப்ரா ரெட் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த வரலாறுகள் இருப்பதால், இந்த சிகிச்சையால் நீர்யானை விரைவில் எழுந்து நடமாடும் என வனத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us