மே.வங்கத்தில் யாத்திரை: கூலித் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்
மே.வங்கத்தில் யாத்திரை: கூலித் தொழிலாளர்களை சந்தித்த ராகுல்
ADDED : பிப் 01, 2024 02:13 PM

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களை ராகுல் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பாரத் ஜோடோ நியாய யாத்திரை என்ற பெயரில், காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை சமீபத்தில் மேற்கு வங்கத்தை அடைந்தது. பின், பீஹாரை அடைந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரை, நேற்று மீண்டும் மேற்கு வங்கத்திற்கு வந்தது.
இந்நிலையில், இன்று(பிப்.,01) யாத்திரையின் போது, மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் தினசரி கூலித் தொழிலாளர்களை ராகுல் நேரில் சந்தித்து உரையாடினார். ராகுலுடன் பீடி சுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் பேசும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அப்போது தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார்.
1.5 லட்சம் பேர்
இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆயுதப்படையில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்களை தற்காலிக ஆள்சேர்ப்பு அக்னிபாத் திட்டம் என்ற பெயரில் ஆதரவற்றவர்களாக விடப்பட்டுள்ளது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
அக்னிபத் திட்டம் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் மட்டுமல்ல இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நாட்டின் புனிதமான உணர்வுகளுக்கு இழைக்கும் துரோகம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.