நாட்டின் விமான நிலையங்களை 350 ஆக அதிகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்
நாட்டின் விமான நிலையங்களை 350 ஆக அதிகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்
ADDED : செப் 27, 2024 09:12 PM

புதுடில்லி: சுற்றுலாவை மேம்படுத்த 2047-ம் ஆண்டிற்குள் நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
உலக சுற்றுலா தினத்தையொட்டி டில்லி விக்யான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு கூறியதாவது:
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், விமான நிலையங்களில் சிறப்பான வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி தற்போது நாட்டில் 157 விமான நிலையங்கள் உள்ளதை அடுத்த 20-25 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்தும் திட்டம் உள்ளது. இதன் மூலம் 2047-ல் உண்மையான விக்சித் பாரத்தை நாம் காணப்போகிறோம். தவிர சாமானியனும் விமான பயணத்தை பயன்படுத்தும் வகையில் உதான் திட்டமும் மேம்படுத்தப்பட உள்ளது என்றார்.

