UPDATED : ஜூன் 27, 2024 03:29 PM
ADDED : ஜூன் 27, 2024 11:48 AM

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் இடம்பெற்றுள்ளதாவது:
*மத்திய பட்ஜெட் இந்தியாவை புதிய பாதையில் அழைத்துச் செல்லும்.
*உலக பொருளாதாரத்தில் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.
*கோவிட் பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
*உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
*உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படுகிறது.
*பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
*உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
*வளர்ந்த இந்தியாவின் அத்தியாயம் புதிய பார்லியில் எழுதப்படும்
*எந்தளவு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்தளவு விவசாயிகள் வளம் பெருகும்
*சிறுதானிய கேந்திரமாக இந்தியா மாறி உள்ளது.
*இனி வரும் காலம் இயற்கை விவசாயத்தின் காலம்
*வடகிழக்கு மாநிலங்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.
*நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது
*பெண்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது
*பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சி
*அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெருகுகிறது.
*ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி என்பதே அரசின் நோக்கம். இதனால் உலகளவில் முதலீட்டை ஈர்க்க முடியும்
*நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது
*உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வுஅளித்து வருகிறது
* 3வது ஆட்சி காலத்தில் மேலும் 3 கோடி வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.