தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/1,500 கூடுதல் பஸ்கள் சிவராத்திரிக்கு இயக்க திட்டம்

1,500 கூடுதல் பஸ்கள் சிவராத்திரிக்கு இயக்க திட்டம்

1,500 கூடுதல் பஸ்கள் சிவராத்திரிக்கு இயக்க திட்டம்


ADDED : மார் 05, 2024 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூரில் இருந்து, கர்நாடகாவின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் 1,500 கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கர்நாடகா மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:

சிவராத்திரியை முன்னிட்டு பயணியர் வசதிக்காக, பெங்களூரில் இருந்து வரும் 8, 9, 10ம் தேதிகளில் கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தாலா, குக்கே சுப்பிரமணியா, ஷிவமொகா, ஹாசன், மங்களூரு, குந்தாப்புரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி.

பெலகாவி, விஜயபுரா, கோகர்ணா, ஷிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பால், யாத்கிர், பீதர் ஆகிய மாவட்டங்களுக்கும், ஆந்திராவின் திருப்பதி, விஜயவாடாவுக்கும், தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கும் சிறப்பு பஸ்கள் இயங்கப்பட உள்ளன.

மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து, மைசூரு, ஹுன்சூர், பிரியப்பட்டணா, விராஜ்பேட், குஷால்நகர், மடிகேரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

சாந்திநகர் பி.எம்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், சென்னை, கோயம்புத்துார், திருச்சி உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும், கேரளாவின் பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு பஸ்கள் பயணம் செய்ய விரும்புவர்கள், www.ksrtc.karnataka.gov.in என்ற இணைய முகவரியில், டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பஸ் ஏறும் இடத்தை சரியாக குறிப்பிட வேண்டும்.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பயணியர் ஊருக்கு செல்லவும், திரும்ப வரவும் சேர்ந்து, ஒருவரே டிக்கெட் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us