4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்; பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்!
4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம்; பறவை மோதியதால் அவசர தரையிறக்கம்!
UPDATED : ஜூன் 03, 2025 10:55 AM
ADDED : ஜூன் 02, 2025 10:01 PM

ராஞ்சி: 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது கழுகு மோதியதால், ராஞ்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியின் பிர்சா முண்டா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 4,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் கழுகு ஒன்று மோதியது.
இதையடுத்து, விமானத்தை ராஞ்சியில் விமானி அவசரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த, பயணிகள் 175 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராஞ்சி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கும் போது, பயணிகள் 175 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் ராஞ்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாட்னாவிலிருந்து வந்து கொண்டிருந்த விமானத்தில், கழுகு மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.