ADDED : செப் 06, 2025 12:58 AM
இந்துார்: தலைநகர் டில்லியில் இருந்து ம.பி.,யின் இந்துாருக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம், 161 பயணியருடன் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்தபோது, இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமான கட் டுப்பாட்டு அதிகாரி களுக்கு, 'பான் பான்' அவசர அழைப்பை விமானி விடுத்தார்.
இதையடுத்து, இந்துாரில் உள்ள தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில், முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனினும், எந்த அசம்பாவிதமும் இல்லாமல், 20 நிமிடங்கள் தாமதமாக, விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
பான் பான் அவசர அழைப்பு என்பது, கடல்சார் மற்றும் வான்வழி வானொலி தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும், சர்வதேச சிக்னல்.
இது, 'உதவி தேவைப்படுகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை' என்பதை குறிக்கிறது.
'பான் பான்' என்றால் என்ன? பான் பான் அவசர அழைப்பு என்பது, கடல்சார் மற்றும் வான்வழி வானொலி தகவல் தொடர்புகளில் பயன்படுத்தப்படும், சர்வதேச சிக்னல். இது, 'உதவி தேவைப்படுகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை' என்பதை குறிக்கிறது. அதே சமயம், அவசரமாக தரையிறங்க விமானி உதவி கேட்கிறார் என்றும் அர்த்தம்.