sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

/

காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

காலத்தை வென்ற காந்தக்குரல் மன்னர் ஜெயச்சந்திரன் காலமானார்

22


UPDATED : ஜன 09, 2025 10:32 PM

ADDED : ஜன 09, 2025 08:58 PM

Google News

UPDATED : ஜன 09, 2025 10:32 PM ADDED : ஜன 09, 2025 08:58 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சூர்: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் 80 உடல் நலக்குறைவால் காலமானார்.

தென்னிந்திய அளவில் பிரபல பின்னணிப் பாடகராக அறியப்பட்டவர் மலையாளத் திரையுலகை சேர்ந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளி்ல 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த சில தினங்களாக ஜெயச்சந்திரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய செய்தி சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக கேரளா மாநிலம் திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெயச்சந்திரன் காலமானார்.

குடும்பம்


1944 மார்ச் 3 ல் தம்புரான் - சுபத்ரகுஞ்சம்மா தம்பதிக்கு 3வது மகனாக எர்ணாகுளத்தில் பிறந்தார். பிறகு இரிஞ்சாலக்குடா பகுதிக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தார். இவருக்கு லலிதா என்ற மனைவி, மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இசை மீது ஆர்வம்


சிறு வயதில் இசை மீதான ஆர்வம் கொண்டு இருந்தார். இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், செண்டா கருவி, மிருதங்கம் வாசிப்பதைக் கற்றுக் கொண்டார்.

பரிசு


செங்கமண்டலத்தில் உள்ள அலுவா செயின்ட் மேரீஸ் உயர்நிலை பள்ளியிலும், இரிஞ்சல்குடா தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும் போதும் பாடல்களை பாடினார். வீடருகே இருந்த தேவாலாயத்திலும் பாடல்பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.1958 ல் மாநில பள்ளி இளைஞர் திருவிழாவில் நடந்த விழாவில் மிருதங்கம் வாசிப்பதில் முதல் பரிசையும், லைட் மியூசிக்கில் இரண்டாம் பரிசையும் வென்றார். இரிஞ்சாலக்குடா கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பாடத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

திரைப்படத்தில் அறிமுகம்


சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடலை கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன் நாயர் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மலையாள திரைப்படத்தில் பாடும்படி அழைத்தனர். முதலில் மலையாள படங்களில் பாடல்களை பாடத் துவங்கினார். இதன் பிறகு அவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முழு நேர பாடகராக மாறினார். தமிழில் பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடல்களை பாடி உள்ளார்.

பெற்ற விருதுகள்


சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது

கேரள அரசின் 5 திரைப்பட விருதுகள்

கேரள அரசின் ஜேசி டேனியல் விருது

தமிழக அரசின் கலைமாமணி விருது

ஜெயச்சந்திரன் பாடிய மெல்லிசை பாடல்கள்

வசந்தகால நதியினிலே, (மூன்று முடிச்சு)

கவிதை அரங்கேறும் நேரம், (அந்த 7 நாட்கள்)

காத்திருந்து காத்திருந்து, (வைதேகி காத்திருந்தாள்)

தாலாட்டுதே வானம் (கடல்மீன்கள்)

ஒரு வானவில் போலே (காற்றினிலே வரும் கீதம்)

சித்திர செவ்வானம் சிரிக்க (காற்றினிலே வரும் கீதம்)

அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்)

ஒரு தெய்வம் தந்த பூவே (கன்னத்தில் முத்தமிட்டாள் )

கொடியிலே மல்லிகைப்பூ... (கடலோர கவிதைகள் )

அம்மன்கோயில் கிழக்காலே (பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து )

புல்லை கூட பாட வைக்கும் புல்லாங்குழல் (என்புருசன் தான் எனக்கு மட்டும் தான்)

மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ( கரும்புவில்) உள்ளிட்ட பல போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.






      Dinamalar
      Follow us