தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி

கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி

கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி


UPDATED : பிப் 11, 2026 05:13 PM

ADDED : பிப் 11, 2026 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 05:13 PM ADDED : பிப் 11, 2026 04:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

கனடாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிக்சையில் உள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும், ஆழ்ந்த இரங்கலும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு;

கனடாவில் நிகழ்ந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம் அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் அதில் இருந்து விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன்.

துக்கமான இத்தகைய தருணத்தில் கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us