sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பெயரில் மதமாற்ற... மோசடி! : உ.பி., சங்கூர் பாபாவின் தில்லாலங்கடிகள் அம்பலம்

/

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பெயரில் மதமாற்ற... மோசடி! : உ.பி., சங்கூர் பாபாவின் தில்லாலங்கடிகள் அம்பலம்

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பெயரில் மதமாற்ற... மோசடி! : உ.பி., சங்கூர் பாபாவின் தில்லாலங்கடிகள் அம்பலம்

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., பெயரில் மதமாற்ற... மோசடி! : உ.பி., சங்கூர் பாபாவின் தில்லாலங்கடிகள் அம்பலம்

4


ADDED : ஜூலை 20, 2025 03:30 AM

Google News

4

ADDED : ஜூலை 20, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உறுப்பினர் போல் காட்டிக்கொண்டு, பிரதமர் மோடி படத்தை வைத்து, 'லெட்டர் பேடு' போட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் மாதம்பூரைச் சேர்ந்த சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்களை சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தது தெரியவந்தது. குறிப்பாக ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், கணவரை இழந்த பெண்களுக்கு நிதியுதவி அளிப்பதாக கூறியும், திருமண வாக்குறுதி அளித்தும், மிரட்டல் விடுத்தும், இருவரும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மதமாற்ற செயல்களுக்காக வெளிநாடுகளில் இருந்து, 500 கோடி ரூபாய் வரை பெற்று வந்தது தெரியவந்ததை அடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், மதமாற்ற வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஈதுல் இஸ்லாம் என்பவர் நடத்தி வந்த, 'பாரத் பிரதிகார்த் சேவா சங்கம்' என்ற அமைப்பின் பொதுச்செயலராக சங்கூர் பாபா செயல்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், இந்த அமைப்பின் பெயரில் நிதி வசூலிக்கும் போது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் பெயரை பயன்படுத்தி அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

மதமாற்ற செயலுக்காகவே, 'பாரத் பிரதிகார்த் சேவா சங்கம்' என்ற அமைப்பை துவங்கி, நிதி திரட்டும் பணியில் சங்கூர் பாபா மற்றும் ஈதுல் இஸ்லாம் ஆகியோர் ஈடுபட்டனர். இந்த அமைப்பு, ஆர்.எஸ்.எஸ்., உடன் தொடர்புடையது போல் இருவரும் காட்டிக் கொண்டனர். அதற்காகவே இப்படியொரு பெயரையும் வைத்துள்ளனர்.

இதற்காக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமையகம் உள்ள மஹாராஷ்டிராவின் நாக்பூரில், தங்கள் அமைப்பிற்கான போலி அலுவலகத்தையும் அவர்கள் உருவாக்கினர். நிதி திரட்டும் பணிக்காக முக்கிய அதிகாரிகளை சந்திக்கச் செல்லும் போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு நெருக்கமானவர்கள் போல் இருவரும் காட்டிக் கொண்டனர்.

நிதி திரட்டலின்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயர்களையும், இஸ்லாம் மற்றும் சங்கூர் பாபாபயன்படுத்திக் கொண்டனர். அமைப்பின் லெட்டர்பேடில், பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் சங்கூர் பாபா பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

'மிஷன் அஸ்மிதா'

உத்தர பிரதேசத்தில், பெண்களை காதல் வலையில் விழவைத்து மதம் மாற்றும், லவ் ஜிஹாத், சட்டவிரோத மதமாற்றம், பயங்கரவாத செயல், சர்வதேச ஜிஹாதி நிதி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக, 'மிஷன் அஸ்மிதா' நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. உ.பி., போலீசார், சிறப்பு அதிரடி படை போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில், ஆக்ராவைச் சேர்ந்த சகோதரியர் இருவர் மாயமான வழக்கை விசாரித்த, 'மிஷன் அஸ்மிதா' குழு, சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளது. கடத்தப்பட்ட பெண்கள், வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதை கண்டுபிடித்த போலீசார், இது தொடர்பாக பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதன் முடிவில், 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த மூவரும், உ.பி., மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா இருவரும், கோவா, உத்தரகண்ட், டில்லியைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட ஐ.எஸ்., அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us