இயற்கை பேரிடர்களால் பேரழிவு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வேதனை
இயற்கை பேரிடர்களால் பேரழிவு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி வேதனை
UPDATED : ஆக 31, 2025 05:00 PM
ADDED : ஆக 31, 2025 12:38 PM

புதுடில்லி: நாடு முழுவதும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் பேரழிவு ஏற்பட்டது பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவைப் பாதுகாப்பதில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்களின் நேர்மையையும் செயல்திறனையும், நாட்டிற்க்காக செய்ததையும் நான் நினைவு கூர்கிறேன். யுபிஎஸ்சி போன்ற கடினமான தேர்வுகளின் தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெறாத மாணவர்களுக்காக, 'பிரதிபா சேது' என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறமையான இளைஞர்களின் தரவு வங்கி உள்ளது. இதை அரசு துறையினர், தனியார் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரண்டு சாதனைகள்
வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழை பெய்த போதும் ஜம்மு காஷ்மீர் இரண்டு சிறப்புமிக்க சாதனைகளை படைத்துள்ளது. புல்வாமாவில் நடந்த முதல் பகல்- இரவு கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான மக்கள் திரண்டு சாதனை படைத்துள்ளனர். இரண்டாவது சாதனை ஸ்ரீநகரில் நடந்த முதல் கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டிகள்.
காஷ்மீரில் நீர் விளையாட்டுகளை பிரபலப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நீர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நாடு முழுவதில் இருந்து 800க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.
இயற்கை பேரிடர்
மழைக்காலத்தில் இயற்கை பேரழிவுகள் நாட்டை சோதிக்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளம், நிலச்சரிவுகளில் ஏற்பட்ட பெரும் அழிவை நாம் கண்டிருக்கிறோம். இந்த சம்பவங்கள் ஒவ்வொரு இந்தியனையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. எங்கே எல்லாம் இயற்கை பேரிடரால் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கு மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மக்களை மீட்டனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு ஒரே பாரதம் உயர்ந்த பாரதம் என்ற உணர்வு மிகவும் முக்கியமானது.
ஒற்றுமை
இன்று நாட்டின் பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான சோலார் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது தச்சர்கள், கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள் எப்போதும் இந்தியாவின் செழிப்புக்கு அடித்தளமாக இருந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
வரும் நாட்களில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கிறது. இத்தாலியில் வால்மீகி சிலை, கனடாவில் 51 அடி உயர ராமர் சிலை, ரஷ்யாவில் குழந்தைகள் வரைந்த இராமாயண ஓவியங்கள் இந்திய கலாசாரத்தின் பரவலைக் காட்டுகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவை நாடே கொண்டாடி வரும் இந்த நேரத்தில், நாம் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
உள்ளூர் மக்களுக்கான குரல், வளர்ந்த இந்தியா என்பதே நம் இலக்கு. விழாக்களில் தூய்மையை மறக்காதீர்கள், தூய்மையுள்ள இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முழு உலகத்தின் கவனமும் இந்தியாவை நோக்கி திரும்பி உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒற்றுமை மிக முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.