ADDED : ஆக 08, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தென் அமெரிக்க நாடான பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் தொலைபேசியில் பேசினேன். என் பிரேசில் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
'வர்த்தகம், எரிசக்தி, தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
'இது, உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு பயனளிக்கிறது' என, குறிப்பிட்டு உள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் பிரதமர் மோடி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

