எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதி: அமித்ஷா பெருமிதம்
எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதி: அமித்ஷா பெருமிதம்
ADDED : பிப் 08, 2024 02:04 PM

புதுடில்லி: '' நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்'' என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது அமித்ஷா எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மியான்மர் எல்லையில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்களின் பாதுகாப்பிற்காகவும், இந்தியாவிற்கும் மியான்மருக்கும் இடையிலான சுதந்திர இயக்க ஆட்சிமுறையை (எப்.எம்.ஆர்) உள்துறை அமைச்சகம் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
நமது எல்லைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். சுதந்திர இயக்க ஆட்சிமுறையை உடனடியாக நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.
இந்திய-மியான்மர் உறவுகளை மேம்படுத்துவதில் உதவியாக இருந்தாலும், சட்டவிரோத குடியேற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி கடத்தல் ஆகியவற்றிற்கு சுதந்திர இயக்க ஆட்சிமுறை உதவுகிறது என குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

