பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: புறப்பட்டார் பிரதமர் மோடி!
ADDED : ஜூலை 02, 2025 09:27 AM

புதுடில்லி: கானா, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரேசிலில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்கட்டமாக, ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டுக்கு இன்று செல்கிறார். 2 நாள் பயணத்தை முடித்துவிட்டு, டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு செல்கிறார்.
பிரேசிலுக்கு ஜூலை 5ம் தேதி செல்லும் மோடி, 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இறுதிக்கட்டமாக, நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அவர் ஜூலை 9ம் தேதி டில்லி திரும்புகிறார்.
டில்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அடுத்த சில நாட்களில், கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்.
உலகத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். பிரேசிலில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். நமீபியா பார்லிமென்டில் உரையாற்றுவது ஒரு மரியாதையாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.