சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவச திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
UPDATED : மார் 01, 2026 03:01 AM
ADDED : மார் 01, 2026 01:53 AM

ஜெய்ப்பூர்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கில், 14 வயது சிறுமியருக்கான, நாடு தழுவிய, எச்.பி.வி., எனப்படும், 'மனித பாப்பிலோமா வைரஸ்' இலவச தடுப்பூசி திட்டத்தை, ராஜஸ்தானின் அஜ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அஜ்மீர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 16,680 கோடி ரூபாய் மதிப் புள்ள நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.
மேலும், நாடு முழுதும், 14 வயது சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டத்தையும் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 'கார்டசில் 4' என்ற தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படும். இது, க ர்ப்பப்பை வாய் புற்று நோயை உண்டாக்கும் எச்.பி.வி., வைரஸ் வகை கள் 16 மற்றும் 18-க்கு எதிராகவும், அதேபோல், வகைகள் 6 மற்றும் 11-க்கு எதிராகவும் பாதுகாப்பு அளிக்கிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆண்டுதோறும், 1.15 கோடி சிறுமியருக்கு இந்த தடுப்பூசியை இலவசமாக செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயமல்ல. பெற்றோர் அல்லது பாது காவலரின் சம்மதத்தை பெற்ற பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், இந்த தடுப்பூசியை அறிமுகப்படுத்திய நாடுகளின் பட்டியலில் நம் நாடும் இணைந்துள்ளது.

