sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

/

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஒலிம்பிக் வீரர்கள்

1


UPDATED : ஆக 15, 2024 03:36 PM

ADDED : ஆக 15, 2024 03:35 PM

Google News

UPDATED : ஆக 15, 2024 03:36 PM ADDED : ஆக 15, 2024 03:35 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனைகள் என மொத்தம் 110 பேர் களமிறங்கினர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றிருந்தது. பதக்கம் வென்றவர்கள் இன்று (ஆக.,15) சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.

Image 1308193

பரிசளிப்பு

ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என இரண்டு வெண்கலம் வென்ற மனு பாகர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார். அதேபோல், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். பின்னர் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி, ஒலிம்பிக் போட்டி அனுபவங்களை கேட்டறிந்தார்.

Image 1308194







      Dinamalar
      Follow us