sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி

/

மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி

மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி

மகாத்மாவின் சுதேசி கொள்கையே தற்சார்பு இந்தியாவின் அடிப்படை தூண்; பிரதமர் மோடி

7


ADDED : ஜன 30, 2026 09:44 AM

Google News

ADDED : ஜன 30, 2026 09:44 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மகாத்மாவின் சுதேசி கொள்கையே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூண் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது வணக்கங்கள். எப்போதும் சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இதுவே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகும். அவரது ஆளுமையும் செயல்களும், நாட்டு மக்கள் கடமையின் பாதையில் நடக்க எப்போதும் தொடர்ந்து ஊக்கமளிக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை; அகிம்சையும், வாய்மையும், அறவழியும் ஆயுதமாகக் கொண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற, மகாத்மா காந்தியடிகள் நினைவு தினம் இன்று.

அமைதி, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாடு, கலாச்சாரப் பாதுகாப்பு முதலானவற்றைப் போதித்த அவரது தியாகங்களைப் போற்றி வணங்குகிறோம். மகாத்மாவின் உயரிய போதனைகளைப் பின்பற்றி, அவருக்குப் புகழ் சேர்ப்போம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us