ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர்; வீடியோ வெளியிட்டு எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்!
ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர்; வீடியோ வெளியிட்டு எம்.ஜி.ஆருக்கு பிரதமர் மோடி புகழாரம்!
ADDED : ஜன 17, 2025 10:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்க்கும் வகையில், வீடியோ ஒன்றை, பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
* ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர்.
* மக்களுக்காக எம்.ஜி.ஆர்., மேற்கொண்ட முயற்சிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.