காங்., ஆட்சியில் சாக்லேட்டுக்கு கூட வரி: விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
காங்., ஆட்சியில் சாக்லேட்டுக்கு கூட வரி: விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி
ADDED : செப் 05, 2025 04:10 AM

புதுடில்லி: பீஹார் தேர்தலை மனதில் வைத்தே ஜி.எஸ்.டி., வரிகள் குறைக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட்டுகளுக்கு கூட வரி விதிக்கப்பட்டதாக பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டி ல்லியில் நேற்று முன்தினம் நடந்த 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரி, வரும் 22ம் தேதி முதல், 5, 18 என்ற இரண்டு சதவீதங்களில் மட்டுமே வசூலிக்கப்படவுள்ளது.
குற்றச்சாட்டு இந்நிலையில், ஜி.எஸ்.டி., வரிகள் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின், மிக தாமதமாக இந்த வரி குறைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டியது.
மேலும், பீஹார் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும், இறக்குமதி பொருட்கள் மீது அதிபர் டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கவும் தான் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப் பட்டதாக விமர்சித்தது.
காங்கிரசின் இந்த விமர்ச னங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தா ர்.
இது குறித்து டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
பிரத மராக, கடந்த 2014ம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன். அதற்கு முன்பாக இருந்த அரசு, சமையல் பாத்திரங்கள் முத ல் வேளாண் பொருட்கள் வரை அனைத்திற்கும் வரி வசூலித்தது. உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ காப்பீடுகளை கூட விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு விதங்களில் வரிகளை சுமத்தி வசூலித்துக் கொண்டிருந்தது.
'டூத் பேஸ்ட், ஹேர் ஆயில், சோப்' ஆகியவற்றுக்கு காங்., ஆட்சியில் 27 சதவீத வரி இருந்தது. உணவு சாப்பிடும் தட்டுகளுக்கு, 18 முதல் 28 சதவீத வரி வசூலிக்கப்பட்டது.
'கப்புகள், ஸ்பூன்கள், டூத் பவுடர்'களுக்கு 17 சதவீத வரி இருந்தது. இவ்வளவு ஏன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் 'டாபி' வகை சாக்லேட்டுகளுக்கு 21 சதவீத வரியை காங்கிரஸ் வசூலித்தது.
எளிய மனிதர்களின் வாகனமான சைக்கிளுக்கு கூட, 17 சதவீத வரி அமலில் இருந்தது. லட்சோப லட்சம் தாய்மார்கள் மற்றும் சகோதரியர் சுயமாக தொழில் செய்து, தற்சார்புடன் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த தையல் மிஷின்களுக்கு 16 சதவீத வரி போடப்பட்டிருந்தது.
காங்., ஆட்சியில் வீடு கட்டுவது கூட சாமானிய மக்களுக்கு கடினமாக இருந்தது. அந்த அளவுக்கு கட்டுமான பொருளான சிமென்ட்டுக்கு 29 சதவீத வரியை விதித்திருந்தது. ஹோட்டல் அறைகள், 'ஏசி, டிவி' மின்விசிறி உள்ளிட்டவற்றுக்கு 31 சதவீத வரி காங்., ஆட்சியில் அமலில் இருந்தது.
மகிழ்ச்சி கடந்த, 2014ம் ஆண்டுக்கு முந்தைய காலம் வரை விவசாயம் செய்வதற்கு கூட, விவசாயிகள் பெருமளவில் செல வழிக்க வேண்டியிருந்தது.
ஆனால், லாபம் என்பது அவர்களுக்கு சொற்ப அளவே கிடைத்தது. வேளாண் சார்ந்த பொருட்களுக்கு அளவுக்கு அதிகமாக வரிகளை வசூலித்ததே இதற்கு காரணம்.
ஆனால், பா.ஜ., ஆட்சி யில் இவை அனைத்திற்கும் தற்போது முடிவு கட்டப்பட்டு விட்டது. இந் த தீ பாவளி, நாட்டு மக்களுக்கு நிச்சயம் இரட்டிப்பு மகிழ்ச்சியை வழங்கும்.
இதற்கான பலனை, நவராத்திரியின் முதல் நாளில் இருந்தே மக்கள் பெறத் துவங்குவர். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மிகப் பெரிய சீர்திருத்தம் இது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.