ADDED : ஆக 24, 2024 01:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டில்லி திரும்பினார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக போலந்து சென்றடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து பேசினார்.
பிறகு அங்கிருந்து நேற்று (ஆக.,23) ரயில் மூலம் உக்ரைன் சென்றார். அங்கு போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதுடன் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தார். இதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்த நிலையில் பிரதமர் மோடி இன்று டில்லி திரும்பினார்.