UPDATED : மே 10, 2024 09:40 PM
ADDED : மே 10, 2024 09:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்: ஒடிசா வந்துள்ள பிரதமர் மோடி இன்று மெகா ரோடுஷோ நடத்தினார்.
எழுகட்டங்களாக நடைபெற்று வரும் பாராளுமன்ற லோக்சபா தேர்தலில்இது வரையில் மூன்று கட்டங்களாக தேர்தல் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இரு நாள் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி இன்று (மே.,10 ம் தேதி) ஒடிசா வந்தார். அவரை பா.ஜ.,வினர் வரவேற்றனர்.
பின்னர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் பா.ஜ, தலைமை அலுவலகம் உள்ள ராம்மந்திர் வாணிவிஹாரி வரை 2.5 கி.மீ. தொலைவிற்கு ரோடு ஷோ நடத்தினார். இதில் சாலையில் இரு புறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து பங்கேற்றனர்.