தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/டிசம்பர் 11, 12ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி

டிசம்பர் 11, 12ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி

டிசம்பர் 11, 12ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டாவா: வட அமெரிக்க நாடான கனடாவிற்கு, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி, வரும் டிசம்பர் 11, 12ம் தேதிகளில் செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன், கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியபோது, இருநாடுகள் இடையே உறவை வலுப்படுத்தவும், வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு இடையே துறைகளில் இணைந்து செயல்படவும் ஒப்புக்கொண்டனர். அப்போது, தங்கள் நாட்டிற்கு வரும்படி பிரதமர் மோடிக்கு, கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். இதன்படி, வரும் டிச., 11, 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு செல்ல உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகள் நடந்து வருகிறது. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடியின் கனடா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கனடா பயணத்தை முடித்துக்கொண்டு, டிச., 13 முதல் 15ம் தேதி வரை அமெரிக்காவில் நடக்கும், ‘ஜி – 20’ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து, டிசம்பர் 16 ,17ல் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் செல்லும் மோடி, ஐரோப்பிய யூனியனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us