ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி பயணம்
ADDED : ஜூன் 11, 2024 07:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்த வாரம் இத்தாலி செல்கிறார்.
ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சிமாநாடு இத்தாலி நாட்டின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் வரும் 13ம் தேதி துவங்கி 15-ம் தேதி வரை நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இந்த வாரம் இத்தாலி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிசாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.